தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா..மாநிலங்களவையில் எடுத்த முக்கிய முடிவு.. | India
தலைமைத் தேர்தல் ஆணையர், இதர தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும் தேர்தல் ஆணையர் பணி நியமன திருத்த மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு பதிலுரை வழங்கிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது அல்ல என்றும், உச்ச நீதிமன்ற அறிவுரையின்படியே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறினார். மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் ஆட்சேபம் தெரிவித்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
Next Story