ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் வார்னிங்

x

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில், வரும் காலத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு பேரணி ஒன்றில், ராகுல் காந்தி பேம்போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோரை அவதூறாக பேசியதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த தேர்தல் ஆணையம், வரும் காலங்களில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அறிவுறுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்