ED வைத்த குறி.. கைதாகும் கெஜ்ரிவால்.. சிறையில் இருந்தே அரசை இயக்க கோரிக்கை

x

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை வலியுறுத்தியுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கைதானாலும் சிறையில் இருந்தே அரசை இயக்க வேண்டுமென, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுத்தனர். புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்