முன்னாள் அமைச்சருக்கு 3ம் முறையாக ED சம்மன்.. பரபரப்பில் கேரளா
கேரளாவில், முன்னாள் அமைச்சர் ஏ.சி. மொய்தீன் நேரில் ஆஜராக, 3வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
vovt
கேரளாவில் முன்னாள் அமைச்சராகவும், தற்போதைய எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் ஏ.சி. மொய்தீன். திருச்சூர் மாவட்டம் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில், ரூபாய் 300 கோடி அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், அதில் ஏ.சி.மொய்தீனுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, மொய்தீனுக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் மொய்தீன் ஆஜர் ஆகாத நிலையில், 3வது முறையாக வரும் 11ம் தேதி ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story