"நடுநிலையோடு இருங்கள்" - ED, IT-க்கு இந்திய தலைமை நீதிபதி அட்வைஸ்
இன்று காலை, புது டெல்லியில், சி.பி.ஐ அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டு உரையாற்றினார். சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளும் சோதனைகளின் போது, தனி நபர் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சோதனைகளுக்குள்ளாகும் நபர்களின் செல்போன்கள் உள்ளிட்ட தனிபட்ட உபகரணங்களை தேவையின்றி கையகப்படுத்த கூடாது என்றார். தனி நபர் உரிமைகளுக்கும், விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் இடையே நடுநிலைத் தன்மை அவசியம் என்று கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பிற்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றங்கள் மீது விசாரணை அமைப்புகள் அதிக கவனம் குவிக்க வேண்டும் என்றார். சி.பி.ஐயின் விசாரணையில் உள்ள வழக்குகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும்
Next Story