ED-ஐ காத்திருக்க சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக மாட்டார் என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளது. தினந்தோறும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக, நீதிமன்ற முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Next Story