டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் ED மீது சரமாரி கேள்விகளை எழுப்பிய ஆம் ஆத்மி

x

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையின் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே மூன்று முறை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நான்காவது முறையாக இன்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் கோவா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதால் இன்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அமலாக்கத்துறைக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், அவரை கைது செய்வதோடு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது தான் பாஜகவின் நோக்கம் என ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக, வழக்கில் குற்றஞ்சாட்டப்படாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதற்காக சம்மன் அனுப்ப வேண்டுமெனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்