தலைநகர் முதல் காஷ்மீர் வரை உலுக்கிய நிலநடுக்கம் - அதிர்ச்சியில் மக்கள்

x

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வட இந்தியாவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கரோருக்கு தென்மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில், 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனுடைய தாக்கமாக வட இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரண்டு வாரங்களில் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்