புல் சரக்கு ஒரே... அலம்பல் - மூன்று போதைகையின் அட்ராசிட்டிஸ்
கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்ததில், வாகனத்தை இயக்கிய ஜான் பீட்டர் என்பவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அபராதம் விதிக்க முடிவு செய்த போலீசார், அபராத சீட்டில் ஓட்டுனரின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை எழுதியபின், கையெழுத்திடச் சொன்னபோது ஜான் பீட்டர் அதற்கு மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாகனத்தில் உடன் வந்த பழனி மற்றும் சங்கரனும் மது அருந்தியது தெரியவந்தது. தங்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உயர்அதிகாரிகளை தெரியும் என்றுகூறி, போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூவரும் வாகனத்தை விட்டு நடந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story