மின் கோபுரத்தில் `குடி'மகன் - "என்னை மறந்து போனாளே" - பீதியில் உறைந்து பார்த்த மக்கள்

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மனைவி பிரிந்த விரக்தியில், உயர் அழுத்த மின் கோபுரத்தின் உச்சியில் ஏறி மதுபோதையில் கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முயன்ற நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதுபோதையில் தள்ளாடியபடி இருந்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை பத்திரமாக மீட்ட போலீசார், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்