"மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - தமிழிசை காட்டம்
நீட் தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் நிலையில், திமுக போராட்டம் நடத்துவது சரியல்ல என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது பேசிய தமிழிசை,நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால், அதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Next Story