`நாளை' மருத்துவர்கள் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு | Doctors Strike

x

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலைக்கு கண்டனம் தெரிவித்து நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், மருத்துவத்துறை இயக்ககம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவத்துறை இயக்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நோயாளிகக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளது. அவசர கால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றில் எந்தவிதமான பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நாளை கூடுதலாக மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட மருத்துவமனை துணை மற்றும் இணை இயக்குநர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்