மிரளவைத்த 12-ம் வகுப்பு போலி மருத்துவர் - காவல்துறை அதிரடி
திருப்பத்தூரை அடுத்த குனிச்சி பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் 12- ம் வகுப்பு வரை படித்து விட்டு மற்றொருவரின் பார்மசி லைசன்சை வைத்து மெடிக்கலும் நடத்தி வந்துள்ளார். அவர் மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து மெடிக்கலில் சோதனை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், வினோத் நோயாளிகளுக்கு ஊசிகள் போட்டு மருந்துகள் கொடுத்து வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து வினோத்தை கைது செய்த அதிகாரிகள் மெடிக்கலில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றினார்.
Next Story