திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள் - 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்தனர். இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியேவும், 2 கிலோமீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும் என தேவஸ்தானம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்