அடித்து நொறுக்கிய பேய் மழை.. பாலத்தை உடைத்து ஓடும் வெள்ளம்.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரள மாநிலம், கண்ணூரிலுள்ள கனிச்சார் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் உள் வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது.
கொட்டியூர், கேளகம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக காஞ்சிரபுழாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சிறிய பாலங்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில், இன்று எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வரும்14ம் தேதி வரை மழை தொடரும் எனவும் கேரளாவில் ஒரு சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story