`டெலிவரி-னா நோ என்ட்ரி'...குழந்தை பிறந்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் வினோத கிராமம்
கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் கொள்ளரஹட்டி கிராமத்தில், பழங்காலத்தில் இருந்தே பெண்கள் யாரெனும் குழந்தை பெற்றால், அது தீட்டு மாதம் எனக்கூறி அவரை முதல் ஒரு மாதத்திற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சூழலில், இரண்டு தினங்களுக்கு முன் 28 வயதான பெண் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில், டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரை ஊருக்குள் அனுமதிக்காமல், ஊருக்கு வெளியே சிறிய குடில் அமைத்து குழந்தையுடன் அங்கு தங்க வைத்துள்ளனர். இதனை அறிந்த தாலுகா நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று பெண்ணை ஊருக்குள் அனுமதிக்காவிட்டால் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். இதனை தொடர்ந்து சில சடங்குகளை செய்து கிராம மக்கள் அந்த பெண்ணை ஊருக்குள் அழைத்து சென்றனர்.
Next Story