டெல்லியில் ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர் - உடனே அரெஸ்ட் பண்ண போலீஸ் | Spider Man

x

டெல்லி துவாரகா பகுதியில், சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து, கார் பானட்டில் அமர்ந்து இளைஞர் சாகசம் செய்வதுடன், தாறுமாறாக காரை ஓட்டுவதாக போலீசாருக்கு புகார்கள் பறந்தன. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதையடுத்து,

ஸ்பைடர் மேன் போல உடை அணிந்த ஆதித்யா, காரை ஓட்டிய கௌரவ் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல்

வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, 26,000 ரூபாய் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்