"நாடு முழுவதும் உஷார்..." திடீர் ஆலோசனை.. அதிகாரிகளுக்கு அலர்ட் கொடுத்த ஜே.பி. நட்டா

x

டெல்லி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கேட்டுக்கொண்டார்.

பருவமழையை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரிப்பதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெங்கு தடுப்பு, கட்டுப்பாடு, நோய் மேலாண்மை நடவடிக்கைகளை முடுக்கி விட அதிகாரிகளை கேட்டுக்கொண்டவர், விழிப்புணர்வுக்கு 24/7 ஹெல்ப்லைன் எண்ணை உருவாக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். நோய்ப்பரவல் அதிகமாகப் பதிவாகும் மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்துமாறு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொண்டார். எய்ம்ஸ் மற்றும் அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு சிறப்பு வார்டுகளை உருவாக்கவும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்