டெல்லிக்கு வந்த பெரும் சிக்கல் "பாஜகவினர் உதவ வேண்டும்..." - ஓப்பனாக கேட்ட கெஜ்ரிவால்
ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச பாஜக அரசுகளோடு பேசி, பாஜகவினர் டெல்லிக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அசாதாரண வெப்பநிலையால் டெல்லியில் மின்சாரத்தின் தேவை அதிகரித்திருந்தாலும், மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் குடிநீருக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குடிநீர் விநியோகம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையில் பாஜகவினர் தங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும், இக்கட்டான நேரத்தில் அரசியல் செய்யாமல் டெல்லி மக்களின் குடிநீர் தேவைக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் அரசுகளோடு, பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தி டெல்லிக்கு குடிநீர் பெற்றுத்தர வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.