போலீசை கார் ஏற்றி கொன்ற இருவர்.. வெளியான சிசிடிவி காட்சி

x

தலைநகர் டெல்லியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, மின்னல் வேகத்தில் வந்த கார் இடித்து தள்ளி தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த டெல்லி போலீஸ் கான்ஸ்டபில் சந்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையத்திலிருந்து ரயில்வே சாலை நோக்கி அவர் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது. காரை பறிமுதல் செய்திருக்கும் போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வரும் நிலையில், சம்பவம் குறித்தான சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்