"ஆதாரங்களை அழிக்க முயற்சி" அமலாக்கத்துறை எடுத்த அதிரடி முடிவு
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை, அமலாக்கத் துறை ஹைதராபாத்தில் கைது செய்தது. இந்நிலையில், அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக கவிதாவின் மனு, வரும் 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது... அதற்குள் அவரை கைது செய்வதில் ஏன் இந்த அவசரம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில், முறைப்படியே கைது செய்தோம் என்றும், கவிதா தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கவிதாவை மார்ச் 23ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story