ஸ்வாதி மாலிவால் விவகாரம்... கெஜ்ரிவால் உதவியாளருக்கு ஷாக் கொடுத்த கோர்ட் - பரபரக்கும் டெல்லி
ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி காவல் துறை மே 18இல் கைது செய்தது. ஜாமீன் பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஷீல் அனுஜ் தியாகி கடந்த 27ஆம் தேதி விசாரித்தார்.
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவத்தின் போது பிபவ் குமார் முதல்வர் இல்லத்தில் இல்லை என்றும் ஸ்வாாதி மாலிவால் கூறியிருப்பது உண்மையில்லை என்றும் அவரின் வழக்கறிஞர் வாதாடினார். நீதிமன்றத்திற்கு வந்ருந்த ஸ்வாதி மாலிவால், பிபப் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என வாதிட்டார்.
இதை தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிமன்றம், பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிபவ் குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.