ஒரே மெயில்.. ஹாஸ்பிடல் முதல் ஏர்போர்ட் வரை - அலறும் டெல்லி
புராரி அரசு மருத்துவமனைக்கு 3.15 மணியளவிலும், மங்கோல்பூரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு 4.26 மணிக்கும் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அந்த மருத்துவமனைகளில் இருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதுவரை சந்தேகப்படக்கூடிய எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும், மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதே போன்று டெல்லி விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2ஆம் தேதி டெல்லியில் உள்ள 131 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story