டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்.. அடுத்த அதிரடி முடிவு

x

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், புதன்கிழமை அன்று விவசாயிகளுக்கு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய கிசான் யூனியன், ஹரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 'கறுப்பு தினமாக கடைபிடிக்கபோவதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், தாக்குதலை நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டி விவசாயிகள் பேச்சுவார்த்தையை நிராகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்