நிற்க இடமின்றி ரயில் கழிவறை ஜன்னலில் அமர்ந்து பயணிக்கும் மக்கள் - தலைநகரில் அவலம்
டெல்லியில் தீபாவளியை முன்னிட்டு ரயிலில் கழிவறை ஜன்னல்களில் அமர்ந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தீபாவளி மற்றும் சத் பூஜையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். குறிப்பாக பீகாரின் பாகல்பூர் எக்ஸ்பிரஸில் ஐந்து பொதுப் பெட்டிகளில் 4,500 பயணிகள் ஏறியதால் கூட்டம் அலைமோதியது. நிற்க இடமின்றி கழிவறை ஜன்னலில் அமர்ந்து பயணிக்கும் அவலம் ஏற்பட்டது.
Next Story