டெல்லி முதல்வர் ஆகிறாரா கெஜ்ரிவால் மனைவி..?
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்திருக்கும் கெஜ்ரிவால் ஜாமீன் ஜூன் ஒன்றாம் தேதியோடு முடிகிறது. இந்த சூழலில் நாளை அவரது இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து கெஜ்ரிவால் ஆலோசனையை மேற்கொள்கிறார். அப்போது ஜாமீன் விரைவில் முடியும் வேளையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கெஜ்ரிவால் ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது. அப்போது அவரது மனைவி சுனிதாவை முதல்வராக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story