வக்பு சட்டம் - ஆவேசமான மம்தா கட்சி எம்.பி.க்கு கண்ணாடி குத்து

x

வக்பு சட்டம் - ஆவேசமான மம்தா கட்சி எம்.பி.க்கு கண்ணாடி குத்து

நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் ஆவேசமாக வாதாடி, கண்ணாடி பாட்டிலை தூக்கி அடித்த மம்தா கட்சி எம்.பி.க்கு கையில் காயம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு எம்.பி.க்களிடம் கருத்துக்களை கேட்டு ஆய்வு செய்கிறது. ஆய்வு கூட்டங்களில் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்கிறது. அந்தவகையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு கூட்டத்தில் மசோதாவில் பல்வேறு அம்சங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் சிறிதுநேரம் ஒத்திக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசிய கல்யாண் பானர்ஜி, மேஜையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து மேஜையில் அடித்ததாக கூறப்படுகிறது. அதில் நெருங்கிய பாட்டிலிருந்து கண்ணாடி குத்தி அவரது கயில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்திற்கு கட்டுப்போட்ட சக எம்.பி.க்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்