நாளுக்கு நாள் மோசமாகும் டெல்லி... ஒரே போடாக போட்ட கோர்ட்

x

டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி பட்டாசு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தபிறகு, பட்டாசு விற்பனை உரிமம் வைத்திருப்பவர்களுக்கு காவல்துறையினர் தொல்லை அளித்து வருகின்றனர் என விற்பனையாளர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பட்டாசு வைத்திருக்கும் வணிகர்களின் கிட்டங்கிகளுக்கு சீல் வைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், டெல்லி ஏற்கெனவே காற்றுமாசுபாடு உள்ளதால், பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. டெல்லியில் பட்டாசுகள் உற்பத்தி, சேகரிப்பு, விற்பனை, வெடித்தல், பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்