ICU-வில் தலைநகர்.. 100-ஐ தாண்டினால் வெளிவரும் எமன்.. ஆபத்தில் குழந்தை முதல் பெரியோர் வரை

x

தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட, நீரும் மாசடைந்து மக்களை ஸ்தம்பிக்க செய்துள்ளது...தலைநகரின் நிலை என்ன ? அதற்கான தீர்வு என்ன ? என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

பண்டிகையை எதிர்நோக்கியுள்ள தலைநகர் டெல்லி...கொண்டாட்ட கோலத்தில் இருக்க வேண்டிய சூழலில் திண்டாடி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை...

டெல்லியில், நாளுக்கு நாள் காற்று மாசு மோசமடைந்து கொண்டே வருவதால், அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் டெல்லி மக்கள்...

அதிலும் டெல்லியின் காற்றின் தரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமான சூழலில் உள்ளது. காற்று மாசுபாட்டை அளவிட AQI என அறியப்படும் காற்றுத் தரக்குறியீடு அளவிடப்படுகிறது. இத்தரக்குறியீட்டு 100ஐ தாண்டினால், காற்று மாசு இருப்பது உறுதியாகும் பட்சத்தில், டெல்லியில் தற்போதைய காற்றின் தரம் 226 ஆக பதிவாகியுள்ளது.

அதாவது, மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக புகை மூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பெரும்பாலானோர் தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

காற்று மாசை கட்டுப்படுத்த 13 வகையான கருவிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலிலும், மக்களை மிரட்டி வருகிறது காற்று மாசு..

இது ஒரு புறமிருக்க, டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை பொங்கும் காட்சிகள் பீதியை ஏற்படுத்தின...

நச்சு நுரைகளால் நிறைந்திருந்த யமுனை ஆற்று நீரை பயன்படுத்தவே முடியாத அளவிற்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர் டெல்லி வாசிகள்...

யமுனை ஆற்றில் 2 சதவீதம் மட்டுமே டெல்லி வழியாக பாய்ந்தோடும் நிலையில், ஆற்றின் மாசுபாடிற்கு 75 சதவீதம் டெல்லியே காரணம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்