“டீப் ஃபேக் வீடியோ” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை முறைப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதை பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்படுவதையும் முறைப்படுத்த கோரி, வழக்கறிஞர் சைதன்யா ரோஹில்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்