சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில நபருக்கு மரண தண்டனை.. தீர்ப்பை கொண்டாடி தீர்த்த மக்கள்
கேரளாவில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை மக்கள் கைத்தட்டி வரவேற்பு அளித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தில், போக்சோ சட்டம் அமலாக்கப்பட்டது. அதே குழந்தைகள் தினத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லால், வழக்குப் பதிவு செய்த நூறாவது நாளில் தீர்ப்பும், 110வது நாளில் தண்டனை வழங்கி இருப்பதற்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Next Story