உயிரை பலி கேட்கும் 'நிபா வைரஸ் ' - அதிகாரிகளின் திடீர் ஆய்வு

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபாவால் உயிரிழந்தவரின் வீட்டில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினார். மருதோன்கரையை சேர்ந்த நபர் 30ம் தேதியும் அயன்சேரியை சேர்ந்த நபர் 11ம் தேதியும் நிபா வைரசால் உயிரிழந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அயன்சேரியை சேர்ந்தவரின் வீட்டில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த பழங்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இரண்டு நாட்களுக்கு கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்