டேஞ்சர் புயலாக உருவெடுத்த `டானா’ - உச்சகட்ட பரபரப்பில் அரசு இயந்திரங்கள்

x

வங்க‌க் கடலில் உருவாக உள்ள புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை நடத்தியது.

மத்திய அமைச்சரவை செயலாளர் சோமநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வுத் துறை தலைமை இயக்குநர், புயல் எப்போது உருவாகும் என்பது குறித்து விவரித்தார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், புயல் கரையை கடக்கும் பகுதிகளில் மக்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அப்போது விவரிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மேற்கு வங்கத்தில் 14 குழுக்களையும், ஒடிசாவில் 11 குழுக்களையும் தயார் நிலையில் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மத்திய ஏஜென்சிகளும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு உதவ தயாராக இருப்பதாக அமைச்சரவை செயலாளர் கூறினார். மேலும், ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களும் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்