இளம் மேயருக்கு குட்டி பாப்பா.. - குவியும் வாழ்த்துக்கள்

x

கேரளாவின் இளம் அரசியல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டமன்றத்திலேயே இளம் எம்.எல்.ஏவாக உள்ள சச்சின் தேவ் என்வருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு கேரள அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதை, சச்சின் தேவ், தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்