"என் மகள் உயிரை பறித்த 'கோவிஷீல்டு'" - இந்தியாவில் பரபரப்பை கிளப்பிய வழக்கு

x

'கோவிஷீல்டு' தடுப்பூசி விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியே தனது மகளின் மரணத்துக்கு காரணம் எனக் கூறி அவரது பெற்றோர் சீரம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக நீதிமன்றங்களில் குவிந்து வரும் வழக்குகளால் சர்ச்சையில் சிக்கி உள்ளது, பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம். தற்போது அதே நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது இந்தியாவின் சீரம் நிறுவனம். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கடந்த ஜூலை 2021ல் மரணமடைந்த பெண்ணின் பெற்றோர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளனர். தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி அரிதான சில பக்க விளைவுகளான ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டணுக்கள் குறைதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்