கோவாக்ஸின் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் அனுப்பிய நோட்டீஸ்
கோவிஷீல்டு போல் கோவாக்ஸின் தடுப்பூசியும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக வெளியாகிய ஆய்வு முறைப்படி நடத்தப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் சார்பில் கோவாக்ஸின் குறித்து ஆய்வை நடத்தி இரண்டு பேராசிரியர்களிடம் உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையேயான ஒப்பீட்டு ஆய்வு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதோடு,
தடுப்பூசி போடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஆய்வில் பங்கேற்றவர்களிடமிருந்து தொலைபேசி மூலம் தரவு சேகரிக்கப்பட்டிருப்பதும், அவை எவ்வித மருத்துவ சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படாமல் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என ஐசிஎம்ஆர் கண்டித்துள்ளது.
Next Story