சரணடைய சொன்ன கோர்ட்.. சந்திரபாபு போட்ட மனு.. கிடைத்தது குட் நியூஸ்
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கி, ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, 53 நாட்கள் சிறையில் இருந்தார்.
கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அவருக்கு கடந்த மாதம் ஆந்திரா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. தொடர்ந்து சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் புறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இம்மாதம் 28ஆம் தேதி தாமாகவே முன்வந்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டுமென்றும் அவருக்கு வழங்கிய இடைக்கால ஜாமின் நிபந்தனையில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதோடு, இந்த மாத 29 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமினில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.