கதறிய இளைஞர்... விடாமல் செ*க்ஸ் டார்ச்சர்... இயக்குநர் ரஞ்சித் வழக்கில் கோர்ட் போட்ட உத்தரவு
கேரளாவில் இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கேரள திரைப்பட இயக்குநர் ரஞ்சித்துக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
கேரள திரைப்பட இயக்குநர் ரஞ்சித், கடந்த 2012-ம் ஆண்டு, தனக்கு திரைப்படத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகக்கூறி, பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், ரஞ்சித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு இயக்குநர் ரஞ்சித், கோழிக்கோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, 30 நாட்களுக்கு ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்து முன்ஜாமின் வழங்கினார். மேலும், 50 ஆயிரம் ரூபாய் இருநபர் ஜாமின் உத்தரவாதத்திற்கு ஆணையிடப்பட்டது.
ஏற்கனவே வங்காள நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாலியல் புகார் அளித்த இளைஞர், தனது வழக்கை வாபஸ் பெற பல்வேறு வழிகளில் ரஞ்சித் நிர்பந்தித்து வருவதாக காவல்துறையிடம் மீண்டும் புகார் அளித்துள்ளார்.