இழுத்தடித்த வனத்துறை... கண்டெய்னரை பள்ளியாக மாற்றி மாஸ் சம்பவம் செய்த IAS... ஓடோடி வந்த அமைச்சர்...

x

தெலங்கானாவில் முதல் முறையாக கண்டெய்னர் ஸ்கூல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பழங்குடியின மக்களுக்காக, மெய் சிலிர்க்க வைக்கும் இதன் பின்னனியை பார்க்கலாம் விரிவாக...

சினிமாவை மிஞ்சும் வகையில் அதிரடி காட்டி, பழங்குடியின மக்களின் ஹீரோவாகியிருக்கிறார் தெலங்கானாவை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவர்...

தெலங்கானாவின், முதுகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கலெக்டர் திவாகரா செய்த தரமான சம்பவம்தான் இந்த கண்டெய்னர் ஸ்கூல்...

வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை என்றும், அவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட அனுமதிக்குமாறும் வனத்துறையை மாவட்ட ஆட்சியர் பலமுறை நாடிய போதும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது...

உடனே, தன் நிதியில் இருந்து 13 லட்ச ரூபாயை எடுத்து, தான் அனுமதி கேட்ட அதே இடத்தில்... மாநிலத்தில் முதல் முறையாக கண்டெய்னர் ஸ்கூல் கட்டி அதிரடி காட்டி இருக்கிறார் திவாகர்...

25 அடி நீளத்திலும், அகலத்திலும் உள்ள கண்டெய்னரை கட்டடமாக மாற்றி.. 12 மேசைகளுடன், சகல வசதிகளுடன் மாவட்ட ஆட்சியர் உருவாக்கிய இந்த பள்ளிக்கூடத்தை தெலங்கானாவின் ஊரக வளர்சித்துறை அமைச்சர் சீதாக்கா திறந்து வைத்தார்..

உடனே மகிழ்ச்சியோடு மாணவர்களுக்கு பாடமும் எடுத்திருக்கிறார் சீதாக்கா..

இந்த சம்பவத்தின் தாக்கம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என பலரும் மாவட்ட ஆட்சியர் திவாகராவை பாராட்டி வரும் நிலையில், இதேபோல் கல்வி வசதியில்லாத பல இடங்களில் கண்டெய்னர் ஸ்கூல் தொடங்கப்படும் என அமைச்சர் சீதாக்கா தெரிவித்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்