எப்போது திருமணம் செய்வீர்கள்? ராகுலிடம் சிறுவன் கேள்வி

x

யூடியூப் vlogger ஆன சிறுவன் ஒருவன் தன்னை நேர்காணல் செய்த வீடியோவை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். பீகாரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் ஈடுபட்டபோது, ராகுல் காந்தியை அந்த சிறுவன் நேர்காணல் செய்துள்ளார். அப்போது, ராகுல் காந்தியிடம் திருமணம் குறித்து சிறுவன் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு பணிகள் இப்போது அதிகம் இருப்பதாகவும், பணி குறைந்த பிறகு திருமணம் பற்றி பார்க்கலாம் என்று ராகுல் காந்தி பதில் அளித்தார். மேலும் அந்த சிறுவன், ராகுல் காந்திக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்