"காங்., எம்.பி., எம்.எல்.ஏ.-தேச விரோதிகள்... சுட்டு தள்ள வேண்டும்..!" கே.எஸ்.ஈஸ்வரப்பா பகீர்
கர்நாடக மாநிலம் தாவங்கேரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக பா.ஜ.க. மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி ஆகியோர் தேச விரோதிகள் என்றும், அப்படிப்பட்டவர்களை கொல்லும் சட்டத்தை பிரதமர் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுபோன்ற துரோகிகளை கட்சியில் இருந்து வேரறுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒன்றுதான் என்றும், அதை பிரிக்க முடியாது என்றும் ஈஸ்வரப்பா கூறினார்.
Next Story