ரூ.1.8 கோடி.. 80 சவரன்..7 கார்கள்.. கோடீஸ்வர வாழ்க்கை.. சாதா கேஸ் என நினைத்தால் பேரதிர்ச்சி

x

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கட்டட காண்டிராக்டரான இவரிடம், கட்டுமான பணிக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி திண்டுக்கல் மலைப்பட்டி ரோடை சேர்ந்த அரவிந்த்குமார், மதுரை அணையூரை சேர்ந்த அன்பழகன் ஆகியோர் கூறியுள்ளனர். அதற்கு முன்பணம் தேவை என கூறி முருகானந்தத்திடம் ரூ.1 கோடியே 86 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும், கடன் வாங்கி தராமல் ஏமாற்றியதாக, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் முருகானந்தம் புகார் அளிக்க, விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், கட்டிட காண்டிராக்டரிடம் மோசடி செய்த இருவரில், அன்பழகன் மீது மதுரையை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 11 வழக்குகள் ஏற்கனவே பதிவாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், மதுரையில் பதுங்கி இருந்த அரவிந்த்குமார், அன்பழகனை கைது செய்தனர். காண்டிராக்டரிடம் மோசடி செய்த ரூ.1 கோடியே 86 லட்சத்தில் கார் மற்றும் நகைகள் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த இருவரிடமும் இருந்து 80 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கப்பணம், 7 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்