"உயிரையும், மடத்தையும் காத்த முதல்வருக்கு நன்றி.." - அதிர வைத்த சம்பவம் - தருமபுரம் ஆதீனம் உருக்கம்
தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாளம் தெரியாத சிலர், போலியான ஆடியோ வீடியோ டேப்களை தயாரித்து மிரட்டல் விடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையை நாடிய போது முதல்வரின் ஆணைப்படி காவல்துறை மிக துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார். துரிதமாக நடவடிக்கை எடுத்து மடத்தின் பெருமையை காத்த காவல்துறை மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக ஆதீனம் கூறியுள்ளார்.
Next Story