ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை

x
  • தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிறையில் விசாரணை துவக்கிய 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள்.
  • ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிடம் மட்டுமே தன்னுடைய வக்கீலிடம் ஆலோசனை கேட்க சந்திரபாபு நாயுடுவிற்கு அனுமதி.
  • 2015 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் 371 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி மாநில சிஐடி போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்
  • அவரிடம் விசாரணை நடத்த சிஐடி போலீசார் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். சிஐடி போலீசாரின் கோரிக்கை ஏற்ற நீதிமன்றம் அவரிடம் இன்றும் நாளையும் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5:30 மணி வரை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.
  • அதன் அடிப்படையில் இன்று காலை 12 பேர் அடங்கிய சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்த ராஜமுந்திரி மத்திய சிறைக்கு சென்றனர்.
  • தொடர்ந்து சந்திரபாபு நாயுடு உடல் நிலையை சிறை டாக்டர்கள் வைத்திய பரிசோதித்தனர்.
  • அதனை தொடர்ந்து சிஐடி அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விசாரணையின் போது சந்திரபாபு நாயுடுவின் வக்கீல்கள் இரண்டு பேர் அங்கு இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு விசாரணையின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிடம் மட்டுமே வக்கீல்களிடம் ஆலோசனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • சந்திரபாபு நாயுடுவிடம் சி ஐ டி போலீசார் விசாரணை நடத்துவதன் காரணமாக அந்த பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரை குவித்து பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்