10ல் 3 பேரை பாதிக்கும் கொடிய நோய்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

x

மதுவால் ஏற்படாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும், பயிற்சி கையேட்டையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டடுள்ளது.

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்கள் இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. 10 இல் 3 பேர் இந்த வகையான நோய்களால் பாதிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார். அதன்படி, ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயாளிகளுக்கு, சரியான நேரத்தில் பொருத்தமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் நோக்கில் முக்கியமான நடவடிக்கையாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகளவில் தொற்றா நோய்களின் சிகிச்சைக்கு இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களும் பயிற்சிக் கையேடும் வெளியிடப்படுவது இந்த நோயைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அளிக்கும் என முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அபூர்வா சந்திரா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்