சந்திரயான்-3..."குறைந்த வேகம்" - இஸ்ரோ அறிவிப்பு | chandrayaan3
சந்திரயான்-3..."குறைந்த வேகம்" - இஸ்ரோ அறிவிப்பு
நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், படிப்படியாக சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நிலவை நெருங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சந்திரயான்-3 வின்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஒன்றாம் தேதி செலுத்தப்பட்டது. நிலாவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த சந்திரயான்-3 வின்கலம், படிப்படியாக சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மூன்றாவது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை குறைத்து, நிலவை சந்திரயான் விண்கலம் நெருங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் வேகத்தை குறைக்கும் பணி வரும் 14ஆம் தேதி காலை 11:30 மணி முதல் நண்பகல் 12:30 மணிக்குள் நடைபெறும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.