சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு - வெளியான அறிக்கை

x

சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு - வெளியான அறிக்கை

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த 7ம் தேதி, எர்ரவள்ளியில் உள்ள இல்லத்தில், பாத்ரூமில் தவறி கீழே விழுந்தார். இதில், அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடதுபக்க இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில், சந்திரசேகர ராவுக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப்பின் சந்திரசேகர ராவ் ஓய்வுக்காக வேறொரு அறைக்கு மாற்றப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்