நாட்டையே பதறவிட்ட `நேற்று’ விஷயம் கேட்டு ஆடிய மத்திய அரசு...இனி சிக்கினால் ஆயுள் தண்டனை?

x

நாட்டையே பதறவிட்ட `நேற்று’

விஷயம் கேட்டு ஆடிப்போன மத்திய அரசு

சிக்கினால் ஆயுள் தண்டனை கொந்தளித்த மத்திய

தொடர் விமான வெடிகுண்டு மிரட்டல்களால் நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யும் அளவிற்கு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக...

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாடு முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது...

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மக்களை ஆட்டம் காணச் செய்து அசாதாரண நிலையை உருவாக்கி இருக்கிறது...

மக்களின் மனதில் பதற்றத்தை விதைத்து, அமைதியை சீர்குலைக்கும் மர்மநபர்களின் இந்த நடவடிக்கை... மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு பரிசீலிக்கும் வகையில் பூதாகரமாகி இருக்கிறது...

சோதனைக்காக விமானத்தை தரையிறக்க ஆகும் எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம், பயணிகளுக்கான இழப்பீடு என, ஒரேயொரு புரளியால் சுமார் 3 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது..

மேலும் இதுவரை விடுக்கப்பட்ட மிரட்டல்களால் 80 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை ஏர் இந்தியா நிறுவன விமானத்துக்கு 27 மிரட்டல்களும், இண்டிகோ நிறுவனத்துக்கு அதிகப்படியான மிரட்டல்களும் வந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன..

இந்நிலையில், டெல்லியிலிருந்து பிராங்பேர்ட் செல்லும் விமானம், சிங்கப்பூரிலிருந்து மும்பை, டெல்லி வரும் விமானங்கள் என ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

இதற்கு முந்தைய நாளில் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இதில் ஒரு விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளை பீதிக்குள்ளாக்கி இருந்தது..

தொடர்கதையாகி வரும் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க அதிகாரிகளும் பலகட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்