"மத்திய அரசு என்னை குற்றவாளிபோல் நடத்துகிறது" - குற்றம்சாட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் மாநிலம், காதுர் சாஹிப் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது,
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து விசாரணை அமைப்புகளும் ஒவ்வொரு நாளும் சம்மன் அனுப்புகின்றன என்றும், அது, தான் மிகப்பெரிய தீவிரவாதியா என்று தனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். தன்னை ஒரு குற்றவாளிபோல மத்திய அரசு நடத்துகிறது என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தன்னை கைது செய்ய விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத வகையில், தன்னை சிறைக்கு அனுப்ப நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். எந்த வழக்கிலும் தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லையென்றாலும், அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி துன்புறுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.
Next Story