"சுப்ரீம் கோர்ட் கைது வாரண்ட்" - சிபிஐ அதிகாரிபோல் பேசி தொழிலதிபரிடம் மோசடி | CBI
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், சிபிஐ அதிகாரி போல் பேசி, அவர் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கொடுத்ததாக மிரட்டி கும்பல் பணம் பறித்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. தொழிலதிபரான இவரை, ராஜேந்திரன் என்ற பெயரில் செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி அறிமுகமானதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து முகமது வாசிம் என்பவருக்கு ஜாபர்கான் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அந்த பணம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி அவர், இதனால் சுப்ரீம் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்த தப்பிக்க அந்நபர் பணம் கேட்ட நிலையில், அவருக்கு 8 தவணைகளாக சுமார் 64 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜாபர் கான் அனுப்பியதாக கூறப்படுகிறது.
முடிவில், இவையணைத்தும் ஆன்லைன் மோசடி கும்பலின் வேலை என்பதை அறிந்த ரமேஷ்பாபு, சென்னை தியாகராய நகர் துணையரிடம் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.